shadow

IMG_9128

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் நடந்த, அண்ணாமலையார் தீர்த்தவாரியில், ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் கட்டியதில், பெரும் பங்காற்றிய வள்ளாள மஹாராஜனுக்கு குழந்தை பேறு இல்லாமல் வருந்தினார். இதனால், வள்ளாள மஹாராஜாவிற்கு, அண்ணாமலையாரே குழந்தையாக பிறந்தார் என, தல புராணங்கள் கூறுகின்றன.இதனை நினைவு கூறும் வகையில், ஆண்டு தோறும் மாசி மகத்தன்று, துரிஞ்சலாற்றங்கரையில், வள்ளாள மஹாராஜாவிற்கு, அண்ணாமலையார் திதி கொடுக்கும் நிகழ்ச்சியும், தீர்த்தவாரியும் நடக்கிறது.அதன்படி, மாசி மகம் நட்சத்திரமான நேற்று, திருவண்ணாமலை அருகே பள்ளிக்கொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள துரிஞ்சலாற்றங்கரையில், அண்ணாமலையார் தீர்த்தவாரி நடந்தது.இதையொட்டி, நேற்று அதிகலை நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, 9 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாருக்கு, சிறப்பு பூஜைகள் நடந்தது.இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து, வழி நெடுகிலும் மண்டகப்படி செலுத்தி வழிபட்டனர்.

Leave a Reply