shadow

‘அம்மா உணவகம்’ போலவே ‘அண்ணா கேண்டீன்’. சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

chandra babuதமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வரும் ‘அம்மா உணவகம்’ ஏழை எளிய மக்களுக்கு குறிப்பாக வெளியூர்களில் இருந்து வேலை தேடி வந்தவர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்து வரும் நிலையில் இதே முறையை பின்பற்றி ‘அண்ணா கேண்டீன்’ விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக ஆந்திரபிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆந்திர மாநில எம்.பி. கேசினேனி நாநி நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ஏழைகளுக்காக தொடங்கப்பட்டுள்ள அம்மா உணவகம் போன்று ஆந்திராவிலும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் விஜயவாடாவில் உள்ள ஆட்டோ நகர் பகுதியில் முதல் கேன்டீன் தொடங்கப்படும். இப்பகுதியில் சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளதால் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து படிப்படியாக ஆந்திர மாநிலம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த கேன்டீனுக்காக மட்டும் ரூ. 3.5 கோடி செலவிட திட்டமிட்டுள்ளது. தனியார் இடத்தில் இந்த கேன்டீன் கட்டப்படும். இதற்காக 6 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்த கேன்டீன் பணியையும், மேற்பார்வையும் பெங்களூரு இஸ்கான் அறக்கட்டளை மேற்கொள்ளும். இவ்வாறு எம்.பி. கேசினேனி நாநி தெரிவித்தார்.ஆந்திரப்பிரதேச முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட் யின் நிறுவனருமான என்டிஆரை அவரது ஆதரவாளர்கள் அண்ணா என்று செல்லமாக அழைப்பது வழக்கம். அவரது நினைவாக அண்ணா கேன்டீன் திட்டம் செயல்படுத்தப் படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார்.

Leave a Reply