sathiesh and anjaliநடிகை அஞ்சலி காமெடி நடிகர் சதீஷை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் பரவி வருகின்றது. ஆனால் இந்த செய்தி வதந்திதான் என்று நடிகர் சதீஷ் மறுப்பு தெரிவித்து வந்தபோதிலும், இந்த வதந்தியை சதீஷ்தான் பரப்பியதாக அஞ்சலி தரப்பில் இருந்து சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு ஆகிய படங்களில் நடித்த முன்னணி நடிகை அஞ்சலி கடந்த சில ஆண்டுகளாக தமிழ்ப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். அவருக்கும் அவருடைய சித்திக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வந்தார். இந்நிலையில் அவருக்கும் பிரபல அரசியல்வாதிக்கும் திருமணம் நடந்ததாகவும் சில மாதங்களுக்கு முன்னர் வதந்தி பரவியது.

தற்போது மாப்பிள்ளை சிங்கம், அப்பா டக்கர் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் அஞ்சலி, சதீஷுடன் இன்னும் ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. அப்படியிருக்கும் நிலையில் அஞ்சலிக்கும் சதீஷுக்கும் திருமணம் என்று எப்படி வதந்தி பரவியது என்றே தெரியவில்லை. எனவே சதீஷ்தான் தன்னுடைய பெயர் பரபரப்பாக ஊடகங்களில் வரவேண்டும் என்பதற்காக திட்டமிட்டு இப்படி ஒரு வதந்தியை பரப்பியிருக்கலாம் என அஞ்சலி தரப்பில் இருந்து சந்தேகம் எழுந்துள்ளதாம். இதனால் அஞ்சலி தரப்பு சதீஷின் மீது செம கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *