அனிருத் விக்னேஷாகவும், விக்னேஷ் அனிருத்தாகவும் மாறியது ஏன்?

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் நேற்று விக்னேஷ் சிவனாக அனிருத்தும், அனிருத்தாக விக்னேஷ் சிவனும் வி.ஜே. அஞ்சனா சந்திரன் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

அஞ்சனா முதலில் விக்னேஷ் சிவனிடம், கேள்வி கேட்க, அவரும் அனிருத் போன்று பதில்களை கூறினார். முதலில் எப்போது கல்யாணம் என்று கேட்டதற்கு நிறைய பெண்களை பார்த்து கொண்டு இருக்றேன். விரைவில் திருமணம் என்றார்.

பின்னர் உங்கள் திருமணம், காதல் திருமணமா? அல்லது வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வீர்களா? என்று கேட்டதற்கு கண்டிப்பாக காதல் திருமணம் தான் என்று அனிருத் போல் பதில் கூறி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார் விக்னேஷ் சிவன்.

அடுத்ததாக அனிருத்திடம் கேள்வி கேட்க, அவரும் விக்னேஷ் சிவன் போன்று பதில்களை கூறினார். அதில் உங்களுக்கு எப்போது, யாருடன் திருமணம் என்ற கேள்விக்கு, அனிருத் கல்யாணமா அப்போ எங்களுக்கு கல்யாணம் நடக்கலையா ?? என்று நகைசுவையாக பதில் அளித்தார் அனிருத். அதற்கு விக்னேஷ் சிவன் அனிருத்தை பார்த்து சிரித்த படி இருந்தார்.

அடுத்ததாக அனிருத்திடம் உங்களுக்கு பிடித்த கதாநாயகி யார்? என்று கேட்டதற்கு, நயன்தாரா என்று அனிருத் கூறியதற்கு அடுத்த நொடி அரங்கமே அதிர்ந்தது.

Related Posts