shadow

‘நீட் தேர்வை ரத்து செய்யும் வரை நிதியுதவியை பெற மாட்டோம்’: அனிதா குடும்பத்தினர் உறுதி

நீட் தேர்வு காரணமாக 1176 மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துவம் படிக்க முடியாத சோகத்தில் தன்னுயிரை விட்ட அனிதாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.7 லட்சம் நிதியுதவியும், அனிதாவின் குடும்பத்தினர் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலையும் கொடுப்பதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பினை அடுத்து நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரூ.7 லட்சம் செக்குடன் அனிதாவின் வீட்டிற்கு சென்றார். ஆனால் என் தங்கை அனிதாவை போல இன்னும் ஆயிரக்கணக்கான அனிதாக்கள் இந்த நாட்டில் உள்ளனர். அவர்களில் ஒரு உயிர் கூட இனிமேல் போகாமல் இருக்க உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ரூ.7 லட்சம் நிதியை வாங்கமாட்டோம்’ என்று கூறினர்.

அனிதாவின் குடும்பம் வறுமையில் பிடியில் இருந்தாலும் ரூ.7 லட்சத்தை துச்சமென மதித்து மாணவர்களின் நலனை மட்டுமே கருதிய அனிதா குடும்பத்தினர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

Leave a Reply