தனுஷின் அப்பாவி தம்பிக்கு ஜோடியாகும் சஞ்சிதா ஷெட்டி
vip-brother
‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தில் தனுஷின் அப்பாவி தம்பியாக நடித்த நடித்த ரிஷிகேஷ் தற்போது ஒரு படத்திற்கு ஹீரோவாகி உள்ளார். இந்த படத்திற்கு ‘ரம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சூதுகவ்வும் நாயகி சஞ்சிதா ஷெட்டி நாயகியாக இந்த படத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் விவேக், நரேன், மியா ஜார்ஜ் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை சாய் என்ற அறிமுக இயக்குனர் இயக்கவுள்ளார். இவர் ஹாலிவுட் இயக்குனர் ஒருவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். தனுஷின் ‘கொடி’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட அனிருத் அதன்பின்னர் இசையமைக்கும் படம் ‘ரம்’ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்காக அனிருத் ஆறு பாடல்களை கம்போஸ் செய்யவுள்ளதாகவும் அவற்றில் இரண்டு பாடல்களை அவரே பாடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

sanjitha shettyrum

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *