ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் அனிருத்! ஆச்சரிய செய்தி

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தி உண்மையெனில் ரஜினி படத்திற்கு அனிருத் இசையமைக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மூன்று படங்களுக்கும், ரஜினி நடித்த ‘கபாலி மற்றும் காலா ஆகிய படங்களுக்கும் இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கும் இசையமைப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அனிருத் இசையமைக்கவுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *