shadow
பிரேம்ஜிக்கு ‘இசை சுனாமி’ பட்டம் கொடுத்த அனிருத்
வெங்கட்பிரபு இயக்கத்தில் பிரேம்ஜி இசையில் உருவான ‘ஆர்.கே.நகர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அனிருத் கலந்து கொண்டு பேசியதாவது:
 ‘நான் இந்த படத்திற்கு விருந்தினராக வரவில்லை. ஒரு விசிறியாக வந்திருக்கிறேன். இந்த படத்தின் நாயகன் வைபவ் நடித்த ‘மேயாதமான்’ படத்தை இதுவரைக்கும் 10 தடவைக்கும் மேல் பார்த்திருப்பேன். அந்த படத்தில் வைபவ்வின் காமெடி, டைமிங் ஆகியவற்றை நானும் என் நண்பர்களும் ரசித்திருக்கிறோம். 
ஆர்.கே.நகர் படத்தின் இயக்குனர் சரவண ராஜன் இயக்கத்தில் முந்தைய படமான ‘வடகறி’ படத்தில் நான் ஒரு பாட்டு பாடியிருக்கிறேன். நண்பர் விவேக்தான் இசையமைத்திருந்தார். இசை சுனாமி பிரேம்ஜிக்கும் எனக்கும் நல்ல நட்பு இருக்கிறது. இசை சுனாமி டைட்டில் பிரேம்ஜிக்கு பொருத்தமாக இருக்கிறது. இதை அவர் வைத்துக் கொள்ள நான் வேண்டிக்கிறேன். 
சிவாவிற்கும் நான் மிகப்பெரிய விசிறி. நான் தியேட்டரில் படம் பார்ப்பது குறைவு. ரஜினி, அஜித் படங்களை முதல் நாளில் போய் பார்ப்பேன். அதுக்குப் பிறகு சிவாவுடைய படத்தைதான் முதல் நாள் போய் பார்ப்பேன். மேடைக்காக சொல்லவில்லை. உண்மையாக சொல்லுகிறேன். அவருடைய காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும்.
படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் பிரவுக்கும் நான் விசிறிதான். சினிமாவில் நண்பர்கள் கிடைப்பது அரிது. ஆனால், வெங்கட் பிரபு பெரிய நண்பர்கள் பட்டாளமே வைத்துள்ளார். அதை தொடர்ந்து மெயிண்டெயின் பண்ணிட்டு வருகிறார். என்னுடைய நண்பர்கள் குழுவும் இதை கடைப்பிடிக்க வலியுறுத்தி வருகிறேன். இவர்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘ஆர்.கே.நகர்’ படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்’ 
இவ்வாறு அனிருத் பேசினார்.

Leave a Reply