shadow

விஜய் சாதனையை அரை மணி நேரத்தில் முறியடித்த அனிருத்?

vijay and anirudhசமீபத்தில் ‘புலி’ படத்திற்காக ஒரு பாடலை பாடிய இளையதளபதி விஜய், ஒரு மணி நேரத்தில் பாடி முடித்து சாதனை செய்தார். இந்நிலையில் அவரது சாதனையை தற்போது அனிருது முறியடித்துள்ளார். ஜெய் நடித்து வரும் ‘புகழ்’ என்ற படத்தில் ஒரு பாடலை பாடிய அனிருத் அந்த பாடலை வெறும் 30 நிமிடங்களில் பாடி முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய், சுரபி, கருணாஸ், ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் நடித்து வரும் புகழ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. ஜெய் பெரிதும் எதிர்பார்த்த வலியவன்’ படம் தோல்வி அடைந்ததால், இந்த படத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றார். இந்த படத்திற்கு இசையமைத்து வரும் விவேக்-மெர்வின், இந்த படத்தின் ஒரு பாடலை அனிருத் பாடினால் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளர் வருண்மணியனிடம் கூற, அவர் அனிருத்திடம் பேசி அனுமதி வாங்கியுள்ளதாக தெரிகிறது.

இந்த பாடலின் ஒலிப்பதிவு சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு ரிகார்டிங் தியேட்டரில் நடைபெற்றது. ‘நாங்க பொடியன்கள்’ என்று தொடங்கும் குத்துப்பாடல் ஒன்றை அனிருத் வெறும் முப்பதே நிமிடங்களில் பாடி முடித்துவிட்டார். இதை இசையமைப்பாளர்கள் பெருமையுடன் தெரிவித்துள்ளனர். இந்த பாடல் படத்தில் ஜெய்யின் அறிமுக பாடலாக வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

‘புகழ்’ படத்தை ‘உதயம் என்.எச்.14’ படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கியுள்ளார். வருகிற ஜூலை 3-ந் தேதி இப்படத்தின் பாடல்களை வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply