கணவரின் சம்மதத்துடன் ஏஞ்சலினா ஜோலியின் ஏழாவது குழந்தை
angelina jolie
பிரபல ஹாலிவுட் நடிகையும், சமூக சேவகியுமான ஏஞ்சலினா ஜோலி ஏற்கனவே 3 குழந்தைகளை தத்தெத்து வளர்த்து வரும் நிலையில் நான்காவதாக சிரியா நாட்டு குழந்தை ஒன்றை தற்போது தத்தெடுத்துள்ளனர்.

ஏஞ்சலினா-பிராட்பிட் தம்பதிகளுக்கு தனித்தனியே மூன்று குழந்தைகள் ஏற்கனவே இருக்கின்றன. இந்நிலையில் கம்போடியா, வியட்நாம் மற்றும் எத்தியோப்பிய நாடுகளில் இருந்து மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் சிரியாவில் இருந்தும் ஒரு குழந்தையை தற்போது தத்தெடுத்துள்ளதால் அவர்கள் வீட்டில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 7ஆக மாறியுள்ளது.

சமீபத்தில் அகதிகளுக்கான ஐ.நா-வின் சிறப்பு தூதுவராக நியமிக்கப்பட்ட ஏஞ்சலினா, உள்நாட்டு போரினால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் சிரியாவிற்கு பயணம் செய்து அங்கு போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்த்து மிகவும் மனம் கலங்கினார். அவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவி செய்ய விரும்பிய ஏஞ்சலினா தனது கணவர் பிராட் பிட் உடன் ஆலோசனை செய்து, சிரியாவில் இருந்து ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஏற்கனவே வெவ்வேறு நாடுகளை சேர்ந்த வெவ்வேறு நிறங்களில் உள்ள குழந்தைகள் அவர்களின் குடும்பத்தை அலங்கரித்து வரும் நிலையில், சிரியாவிலிருந்து அவர்களுடன் இணையப்போகும் குழந்தையுடன் அவர்கள் குடும்பத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.  ஏழாவதாக இணைந்த குழந்தையை மற்ற ஆறு குழந்தைகளும் இன்முகத்துடன் வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *