அனேகன் திரைவிமர்சனம்

anegan

வேலையில்லா பட்டதாரி, ஷமிதாப் ஆகிய இரண்டு ஹிட் படங்களை கொடுத்துவிட்டு ஹாட்ரிக் வெற்றிக்காக காத்திருக்கும் தனுஷ், மாற்றான் தோல்வியில் இருந்து எழுந்து வர வேண்டிய கட்டாய நிலையில் கே.வி.ஆனந்த், ஹாரீஸ் ஜெயராஜின் டங்காமாரி உள்பட அனைத்து பாடல்களும் ஹிட், முன் ஜென்மக்கதை என்ற பெரிய எதிர்பார்ப்பு என இத்தனை எதிர்பார்ப்புகளை கொண்ட அனேகன் திரைப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்த பெரிய எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா? என்பதை தற்போது பார்ப்போம்.

படத்தின் நாயகி அம்ரியாவுக்கு திடீர் திடீரென முன் ஜென்ம ஞாபகங்கள் வருகின்றது. அதுவும் ஒரே ஒரு முன் ஜென்மம் கிடையாது. அதுக்கும் மேலெ என்பது போல் மொத்தம் நான்கு முன் ஜென்ம ஞாபகங்கள். நான்கிலும் அம்ரியா தனுஷையே லவ் செய்கிறார். ஆனால் ஒவ்வொரு முன் ஜென்மத்திலும் ஒரு வில்லன் குறுக்கிட்டு காதலர்களை பிரிக்கின்றனர். அதே தனுஷ்-அம்ரியா ஜோடி இந்த ஜென்மத்திலும் காதலிக்கின்றனர். அதே வில்லன் கோஷ்டிகள் இந்த ஜென்மத்திலும் பிரிக்க முயற்சி செய்கின்றனர். இந்த ஜென்மத்திலாவது காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான் கதை.

தனுஷுக்கு இந்த படத்தில் ஐந்து கெட்டப்புகள். பர்மா நாட்டின் ஏழை இளைஞன், ஐ.டி. கம்பெனி இளைஞன், சென்னையின் பிரபல ரவுடி என பல அவதாரங்கள் ஒரே படத்தில் எடுத்துள்ளார். இதில் சென்னை ரவுடி வேடத்தில் பயங்கரமாக கலக்கியிருக்கின்றார். ஒருசில காட்சிகள் புதுப்பேட்டை’யை ஞாபகப்படுத்தினாலும் தனுஷை விட்டால் இந்த கேரக்டருக்கு வேறு எந்த நடிகரும் பொருந்த மாட்டார் என்பது உண்மைதான். முதலில் இந்த கேரக்டரில் நடிக்க கே.வி.ஆனந்த் விஜய்யை அணுகினாராம். நல்ல வேளை விஜய் மறுத்துவிட்டார்.

பாலிவுட் நாயகி அம்ரியாதான் ஹீரோயின். கதை இவரை சுற்றியே நகர்வதால் மற்ற பட ஹீரோயின் மாதிரி காதல் டைம்பாஸுக்கு வந்துவிட்டு போகும் கேரக்டர் அல்ல. தனுஷுடன் வரும் எல்லா முன் ஜென்மத்திலும் இவரும் கூடவே வருகிறார். தனுஷை போலவே இவருக்கும் பலவித கெட்டப்புகள். முதல் தமிழ்ப்படம் என்பதால் நடிப்பில் தேறிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்

நீண்ட இடைவெளிக்கு பின்னர் கார்த்திக். பழைய இளமைத்துள்ளல் இன்னும் இவரிடம் மிச்சமிருக்கின்றது என்பதை பார்க்கும்போது தமிழ் சினிமா இவரை இத்தனை வருடங்கள் மிஸ் செய்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அரசியலை தலைமுழுகிவிட்டு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தினால் வில்லன் மற்றும் கேரக்டர் ரோல்களில் அசத்தலாம்.

சுபாவின் கதைகளில் சாதாரணமாகவே பூச்சுற்றல்கள் அதிகமாக இருக்கும். இதில் கேட்கவே வேண்டாம். கொஞ்சம் ஓவர்தான்.  ரசிகர்களின் காதுகளில் டன்கணக்கில் சுபாவுடன் இணைந்து பூ சுற்றியுள்ள கே.வி. ஆனந்த், அந்த முன் ஜென்ம காட்சிகளையும் இழுவையாக அமைத்துள்ளார். தற்போதைய ஜென்மத்தின் காட்சியமைப்புகள் மட்டும் அருமை. இடையிடையே சில டுவிஸ்டுகள் வந்தாலும், ஏதோ மிஸ் ஆவது போல ஒரு உணர்வு தெரிகிறது. இடைவேளை வரை திரைக்கதையிலும் விறுவிறுப்பு இல்லை. ஒரு ஜென்மத்தில் கெட்டவனாக இருக்கும் ஒருவன் அடுத்த ஜென்மத்தில் நல்லவனாக இருப்பதை எத்தனை பேர்கள் புரிந்து கொள்வார்கள் என்பது தெரியவில்லை.

படத்தின் பெரிய பிளஸ் பாயிண்ட் பாடல்கள். டங்காமாரி பாடலில்போது தியேட்டரில் ரசிகர்களின் விசில் சப்தம் விண்ணை முட்டுகிறது.

மொத்தத்தில் தனுஷ், ஹாரீஸ் ஜெயராஜுக்காக ஒருமுறை பார்க்கலாம்.

தனுஷ் நடித்த ‘அனேகன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் சுமார் 700 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் பெரும் எதிர்பார்ப்பிற்கு தனுஷ், கே.வி.ஆனந்த், ஆகிய பிரபலங்கள் இருந்தாலும், ஹாரீஸ் ஜெயராஜின் இசை ஒரு முக்கிய காரணமாக கூறப்பட்டு வருகிறது. அதிலும் அவர் பிரபல கானா பாடல் மேதை மரணகானா விஜியை வித்தியாசமாக பாடவைத்த ‘டங்காமாரி’ பாடலை திரையில் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் டங்காமாரி பாடல் உருவான விதம் குறித்தும், கானா பாடல்களின் வரலாறு குறித்தும், அனேகன் பாடலை பாடும்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் நமது சென்னை டுடே நியூஸ் இணையதளத்திற்கு மரணகானா விஜி கொடுத்த பிரத்யேக பேட்டியை இங்கு காணலாம்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1C9Glj1″ standard=”http://www.youtube.com/v/9Ke8XQepmeE?fs=1″ vars=”ytid=9Ke8XQepmeE&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep6998″ /]

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1HORHtQ” standard=”http://www.youtube.com/v/YlIUPvg4VvI?fs=1″ vars=”ytid=YlIUPvg4VvI&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep5314″ /]

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *