shadow

policeநேற்று முன் தினம் திருப்பதி அருகே உள்ள வனப்பகுதியில் செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 20 தமிழர்கள் ஆந்திர போலீஸாரால் சுட்டு கொல்லபட்ட சம்பவத்தின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் செம்மரம் வெட்ட திருப்பதி காட்டுக்குள் வந்தால் மீண்டும் வந்தால் சுட்டுக்கொல்வோம் என்று ஆந்திர போலீஸ் அதிகாரி மல்கோத்ரா கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை ஆந்திர மாநில போலீசார் நியாயப்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக ஆந்திர மாநில அரசு, மத்திய உள்துறை மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு பதில் அளிக்க முடிவு செய்துள்ளது.

திருப்பதி காட்டுக்குள் 20 தமிழர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர மாநில அதிரடிப்படை போலீசார்களுக்கு நேற்று அரசு சார்பில் விருந்து கொடுக்கப்பட்டதொடு அவர்களுக்குப்  பதவி உயர்வு கொடுக்க அரசு பரிந்துரை செய்துள்ளது.

என்கவுட்டரில்  ஈடுபட்ட அதிரடிப்படை வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர சிறப்பு அதிரடிப்படை கூடுதல் போலீஸ் அதிகாரி  மல்கோத்ரா சித்தூர் கூறியுள்ளார். மேலும் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியபோது, “திருப்பதி வனப்பகுதிக்குள் வளர்க்கப்படும் செம்மரங்களை கடத்தல் கும்பல் அழிப்பதால் மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது. நாங்கள் பல தடவை எச்சரித்தும், நடவடிக்கை எடுத்தும் செம்மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க முடியவில்லை. எனவே செம்மரம் வெட்டுபவர்கள் மீது இனி துப்பாக்கி சூடு நடத்தப்படும். தமிழர்கள் இந்தக்  காட்டுக்குள் ஊடுருவி செம்மரங்களை வெட்டினால் மீண்டும் அவர்கள் மீது துப்பாக்கியால் சுடுவோம்” என்று கூறினார்.

மீண்டும் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவோம் என போலீஸ் அதிகாரி கூறியிருப்பது தமிழக மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply