shadow

andhraநேற்று முன் தினம் 20 அப்பாவி தமிழர்களை ஆந்திர போலீஸார் என்கவுண்டர் செய்தததால் இரு மாநிலங்களுக்கும் இடையே பெரும் பதட்டம் நிலவி வருகிறது. இதுகுறித்து உடனடியாக அறிக்கை அனுப்பும்படி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தொடர்பு கொண்டு பேசியதாகவும், இதனால் ஆந்திர அரசு நேற்று அறிக்கை ஒன்றினை மத்திய அரசிடம் சமர்ப்பித்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

அந்த அறிக்கையில்,” 20 தமிழர்கள் மீதும் தற்காப்புக்காகத்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அனைவரும் கோடாரி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும், கடத்தல்காரர்கள் வனத்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதால்தான் பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் குற்றவாளிகள் பலர் மரம் வெட்டிக் கொண்டு இருந்தபோது, சிலர் கண்காணிப்புப்  பணியில் ஈடுபட்டு வந்ததாகவும், அந்த இடம் இருள் சூழ்ந்த வனப்பகுதி என்பதால் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்துவதை தவிர வேறு வழியில்லாமல் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply