shadow

 

busஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்ற பேருந்தில் இருந்து திடீரென புகை கிளம்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை ராஜமுந்திரியில் உள்ள செருகுரி என்ற விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வந்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அங்கிருந்து மதுராபுடியில் உள்ள திருமண மண்டபத்துக்கு பேருந்து ஒன்றில் பயணம் செய்தார். உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வதற்காக மதுராபுடி சென்றார்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/15PTDqf” standard=”//www.youtube.com/v/WdjSFRz1S3I?fs=1″ vars=”ytid=WdjSFRz1S3I&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep6995″ /]

சந்திரபாபு நாயுடு சென்ற பேருந்தின் பின்னால் பாதுகாப்பு வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அந்த சமயத்தில் பாதுகாப்பு வாகன ஓட்டுநர், முதல்வர் சென்ற பேருந்தில் இருந்து புகை வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக பேருந்தை நிறுத்த கோரினார். இதன் பின்னர் முதல் பேருந்தில் இருந்து இறங்கி வேறு ஒரு கார் மூலம் முதல்வர் விழா நடைபெறும் இடத்திற்கு சென்றார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தின் இன்ஜினில் இருந்து புகை கிளம்பியது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply