shadow

துணை முதல்வர் மகன் மீது பிடிவாரண்ட்: ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திர மாநிலத்தின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் செருகுலபாடு நாராயண ரெட்டியை கொலை வழக்கில், அம்மாநில துணை முதல்வர் கிருஷ்ண மூர்த்தி அவர்களின் மகன் ஷியாம் பாபு மீது பிடிவாரன்ட் உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செருகுலபாடு நாராயண ரெட்டி. இவர் அங்குள்ள பத்திகொண்டா தொகுதியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக இருந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் இவரும் இவருடைய நண்பரும் காரில் சென்ற போது மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி கொலை செய்தது.

இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், அம்மாநில துணை முதல்வர் கிருஷ்ண மூர்த்தியின் மகன் ஷியாம் பாபு தான், நாராயண ரெட்டியை கொலை செய்ததாக செய்திகள் வந்தன.

இது குறித்து நாராயண ரெட்டின் மனைவி ஸ்ரீதேவி, துணை முதல்வரின் மகன் ஷியாம் பாபுவின் பெயரை காவல்துறையினர் முதலில் குற்றப்பத்திரிக்கையில் சேர்த்தாகவும், பின்னர் அரசியல் நெருக்கடி காரணமாக அதை நீக்கி விட்டதாகவும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம், துணை முதல்வரின் மகன் ஷியாம் பாபு, காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் நாகபிரசாத், பொஜ்ஜம்மாள் ஆகியோர் மீது பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்ததுள்ளது.

Leave a Reply