2 நாட்களில் 5 டெஸ்ட் போட்டிகளா? ஜேம்ஸ் ஆண்டர்சன் கண்டனம்

இந்திய அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், டி-20 என மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட உள்ளது. முதலில் டி20 தொடரும், பின்னர் ஒருநாள் தொடரும், கடைசியாக டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ள நிலையில் டி20 தொடர் அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடர் ஜூலை 12-ந்தேதியும், டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது.

ஐந்து டெஸ்டுகளும் ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 11-ந்தேதி தேதிக்குள் அதாவது 42 நாட்களில் நடத்த திட்டமிட்டுள்ளது. போதிய இடைவெளி இல்லாமல் மிகவும் குறுகிய காலத்தில் டெஸ்ட் போட்டியின் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளதற்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில் ‘‘கடந்த இரண்டு வருடங்களாக என்னுடைய தோள்பட்டை காயம் பிரச்சனை இருந்து வருகிறது. என்னால் சிறந்த வழியில் அதை பார்த்துக் கொள்ள முடியும். நான் உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்ற தோள்பட்டையை வலுவாக்குவது அவசியம். 42 நாட்களுக்குள் ஐந்து டெஸ்ட் என்பது கேலிக்கூத்தானது. இது ஏராளமான வகையில் மன ஆழுத்தத்தை கொடுக்கும். இந்த அட்டவணையால் நான் லன்காஷைர் அணிக்கான சில போட்டிகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’’ என்று கூறினார்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *