shadow

10 ஆயிரம் கோடி ரூபாய் சேமிப்பது எப்படி? அரசுக்கு அன்புமணி ஆலோசனை

சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்தை தனது ஆலோசனையின்படி செயல்படுத்தினால் தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் கோடி மிச்சமாகும் என்று அன்புமணி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மஞ்வில் கூறியிருப்பதாவது: பசுமை வழி சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் 2 ஆயிரத்து 791 ​ஹெக்டர் நிலங்களை கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்தினால் ஜருகு, சேவராயன், சின்ன கல்வராயன் உள்ளிட்ட 8 மலைகளும், வன விலங்குகளும் பாதிக்கப்படும்.

மேலும், திண்டிவனம், தர்மபுரி வழியாக சேலம் செல்லும் நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தினால் 10 ஆயிரம் கோடி ரூபாய் சேமிப்பதுடன் ஒரு லட்சம் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கலாம்.

மேலும் மாற்று பாதையில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று அன்புமணி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

Leave a Reply