இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்; திமுகவுக்கு பாராட்டு தெரிவித்த அன்புமணி

கடந்த சில நாட்களாக முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதாகவும், அதனால் முரசொலி மூலப்பத்திரத்தை காண்பிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டி வரும் நிலையில் டாக்டர் ராமதாஸ் மீது ரூபாய் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடரப்படும் என எச்சரித்து திமுக தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

திமுகவின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து கூறிய பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்’திமுக-வின் இந்த நடவடிக்கையை வரவேற்பதாகவும், இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு வந்தால்தான் முரசொலி குறித்தான உண்மையான பத்திரம் வெளியே வரும் என்றும், எனவே, திமுக-வின் நடவடிக்கையை நாங்கள் முழு மனதோடு வரவேற்கின்றோம்,” என்றும்

முன்னதாக சமீபத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நேரடியாக முரசொலி அலுவலகத்திற்கு வந்து விசாரணை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply