shadow

maasaaniyamman ramar masani ammanpoojai

 

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா வருகிற 8–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

மாசாணியம்மன் கோவில்

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று ஆனைமலை மாசாணியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு தினமும் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகிறார்கள். கோவிலில் ஆண்டு தோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை அன்று குண்டம் திருவிழா தொடங்குவது வழக்கம்.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 8–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதன்படி அன்று காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் கொடியேற்றப்படுகிறது. இதையடுத்து தொடர்ந்து 18 நாட்களுக்கு அம்மனுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜைகள் நடக்கிறது.

மயான பூஜை

கொடியேற்றம் நடைபெற்ற 14–வது நாளில் மயான பூஜை நடைபெறுவது வழக்கம். இதன்படி வருகிற 21–ந் தேதி நள்ளிரவு ஆனைமலை மயானத்தில் மயான பூஜை நடக்கிறது. இங்கிருந்து பிடிமண் எடுத்து வரப்பட்டு, 22–ந் தேதி காலை 6 மணிக்கு சக்திகும்பஸ்தாபனம் நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு மகா பூஜையும் நடைபெற உள்ளது.

23–ந் தேதி காலை 10.30 மணிக்கு குண்டம் கட்டுதல் நிகழ்ச்சி சேத்துமடை ரோட்டில் உள்ள குண்டம் மைதானத்தில் நடைபெற உள்ளது. அன்று மாலை 6.30 மணிக்கு சித்திரத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதி உலா வருகிறார். பின்னர் சித்திர தேர் குண்டம் மைதானத்தை அடைகிறது. அங்கு இரவு 10.30 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

பூக்குண்டம்

24–ந் தேதி காலை 9 மணிக்கு விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குண்டம் இறங்குகிறார்கள். 25–ந் தேதி காலை 9 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்ச்சியும், 10.30 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜையும் நடைபெறுகிறது. 26–ந் தேதி காலை 11.30 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் கார்த்திக் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Leave a Reply