shadow

விஜய் செய்ய முடியாததை செய்து முடித்த கமல்?

kamal vijayஇளையதளபதி விஜய்க்கு கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பு எதிர்பாராத நிலையில் அவருடைய கையைவிட்டு சென்றதாகவும், அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு உலக நாயகன் கமல்ஹாசனுக்கு கிடைத்துள்ளதாகவும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் ‘தூங்காவனம்’ படம், ஏற்கனவே பிரெஞ்ச் மொழியில் வெளியான ‘ஸ்லீப்லெஸ் நைட்’ என்ற படத்தின் அதிகாரபூர்வ ரீமெக் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஸ்லீப்லெஸ் நைட் படத்தில் நடித்திருந்த கதாநாயகன் டோமர் சிஸ்லே நடித்த மற்றொரு படம் லார்கோ வின்ச். இந்த படம் கடந்த சில வருடங்களுக்கு முன் விஜய் நடிப்பில் ரீமேக் ஆக இருந்தது. ஆனால் டைட்டில் அறிவிக்கப்பட்ட கையோடு இந்த படம் திடீரென கைவிடப்பட்டது அந்த படம்தான் விஜய் நடிப்பில் கவுதம் மேனன் இயக்குவதாக இருந்த ‘யோஹான் அத்தியாயம் ஒன்று” என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனின் உதவியாளர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ள தூங்காவனம் படத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர் சம்பத், ஆஷா சரத், உமா ரியாஸ்கான், யூகிசேது, மதுஷாலினி, மற்றும் பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply