shadow

spiderman

கடந்த 1ஆம் தேதி ரிலீஸ் ஆன தி அமேசிங் ஸ்பைடர்மேன் என்ற ஹாலிவுட் திரைப்படம் இந்தியாவில் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது. இன்று சோனி பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தி அமேசிங் ஸ்பைடர்மேன் திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் ரூ.41.7 கோடி இந்தியாவில் மட்டும் வசூலாகி சாதனை படைத்துள்ளது.

இந்தியா முழுவதும் மொத்தம் 1523 தியேட்டர்களில் தமிழ்,தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியான தி அமேசிங் ஸ்பைடர்மேன்  3D, 2D, IMAX 3D மற்றும் Dolby திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.

இந்த திரைப்படம் இந்தியாவிலேயே ஒப்பனிங்கில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் நான்காவது இடத்தை பெற்றுள்ளது என்றும், ஸ்பைடர்மேன் முதல் பாகத்தின் வசூலை இந்த திரைப்படம் மிக விரைவில் கடந்துவிடும் என்றும் சோனி பிக்சர்ஸ்  நிறுவனத்தின் இந்திய மேலாளர் கெர்சி தருண்வாலா தெரிவித்துள்ளார்.

Leave a Reply