shadow

டிடிவி தினகரனுக்காக பிரச்சாரம் செய்யும் தொப்பி நாயகி

டிடிவி தினகரனுக்கு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னம் கிடைத்தாலும் கிடைத்தது தொப்பி விற்பனை தற்போது அமோகமாக நடைபெற்று வருகிறதாம். விற்காமல் மூலையில் இருந்த தொப்பிகள் எல்லாம் தற்போது நல்ல விலைக்கு விற்பனை ஆவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

இந்நிலையில் தொப்பி வைத்து நடித்த புகழ்பெற்ற நடிகர், நடிகைகளையும் பிரச்சாரத்திற்காக இழுக்கும் முயற்சியில் தினகரன் தரப்பு இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த முயற்சியில் முதல் ஆளாக சிக்கியவர் ‘மதராஸ பட்டணம்’ படத்தில் தொப்பி போட்டு நடித்த நடிகை எமிஜாக்சன்.

தினகரனிடம் இருந்து மிகப்பெரிய தொகை கைமாறியுள்ளதாகவும் விரைவில் நடிகை எமிஜாக்சன் தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் வெகுவேகமாக வதந்தி ஒன்று சமூக இணையதளங்களில் பரவி வருகிறது. நல்லவேளை எம்ஜிஆர் உயிருடன் இல்லை, இல்லையென்றால் அவரையும் தினகரன் பிரச்சாரத்திற்கு அழைத்து சென்றுவிடுவார் என்று டுவிட்டரில் ஒரு ஜோக் உலவி வருகிறது.

Leave a Reply