shadow

ரஜினிக்கு உதவியாளராக சேர்ந்தார் எமிஜாக்சன்
amy
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ‘2.0’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சென்னை அருகே உள்ள ஈவிபி தீம் பார்க்கில் பிரமாண்டமான செட் தயாராகி வருகிறது. ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு மலேசியாவில் இருந்து ரஜினிகாந்த் இந்தியா திரும்பியவுடன் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு உதவியாளராக எமிஜாக்சன் நடித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. எமிஜாக்சனும் அவரது தோழிகளும் ரஜினிக்கு உதவியாளர்களாக சேருவதாகவும், நாளடைவில் ரஜினி மீது எமிஜாக்சனுக்கு காதல் வருவதாகவும் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் முதல் பாகமான ‘எந்திரன்’ படத்தில் ரோபோவை உருவாக்கும் விஞ்ஞானி ரஜினிக்கு உதவியாளர்களாக சந்தானம் மற்றும் கருணாஸ் ஆகிய இருவரும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எமிஜாக்சன் இந்த படத்தில் உதவியாளராக முதல் பாகத்திலும் பின்னர் ரோபோவாக இரண்டாவது பாகத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Chennai Today News: Amy Jackson joins Rajinikanth’s assistant

Leave a Reply