shadow

12பொதுமக்களுக்கும் பஸ் மற்றும் ரயில் பயணிகளுக்கும் மிகக்குறைந்த விலையில் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் நோக்கில் இந்தியாவிலேயே தமிழக அரசு முதல் முறையாக ‘அம்மா குடிநீர்’ என்ற பெயரில் பாட்டில்களில் ஒரு லிட்டர் ரூ.10-க்கு விற்பனை செய்து வருகிறது. இதனால் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த குடிநீரை தயாரிக்க திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சாலை போக்குவரத்துக் கழக நிறுவன வளாகத்தில் 2.47 ஏக்கர் பரப்பில்,  குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு அதில் குடிநீர் தயாரகி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து தினமும் 3 லட்சம் லிட்டர் குடிநீர் பாட்டில்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.  பாட்டில் ஒன்றுக்கு ரூ.10-க்கு விற்கப்படுவதால் இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற தனியார் குடிநீர் பாட்டில்களில் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.20 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கும்மிடிப்பூண்டியில் இருந்து தமிழகம் முழுவதும் குடிநீர் பாட்டில்களை கொண்டு செல்வதில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளதால்  2-வது குடிநீர் உற்பத்தி நிலையத்தை தென் மாவட்டத்தில் தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் குடிநீர் கொண்டு செல்லும் போக்குவரத்து செலவும் மிச்சமாகும். இந்த புதிய தொழிற்சாலையை விரைவில் ஆரம்பிக்க தமிழக அரசு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மதுரை அல்லது திருச்சியில் இந்த தொழிற்சாலை அமைக்கப்படும் எனதெரிகிறது.

Leave a Reply