shadow

amma-cement-jayalalitha-announce-image1

சிமெண்ட் விலை நாளொருமேனி பொழுதொருவண்ணமாக ஏறிக்கொண்டிருந்த வேளையில் தமிழக அரசின் மலிவு விலை சிமெண்ட் விற்பனை திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. கடிவாளம் இல்லாத குதிரை போல ஏறிக் கொண்டிருக்கும் சிமெண்ட் விலை உயர்வுக்கு மத்தியில் இந்தத் திட்டம் பொதுமக்களுக்கும், தொழில்முறைக் கட்டுநர்களுக்கும் உதவுமா?

இந்தியாவில் சுமார் 30 கோடி டன்னுக்கும் அதிகமாக சிமெண்ட் தயாரிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகியவைதான் சிமெண்ட் உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றன. கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை, ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட சரிவு போன்ற பல காரணங்களால் தமிழகத்தில் சில மாதங்களாகவே கட்டுமானப் பணிகளில் தேக்கம் ஏற்பட்டது.

மணலுக்கான தட்டுப்பாடு ஓரளவுக்குச் சீராகி வந்த நேரத்தில் சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ. 350-லிருந்து 400 வரை உயர்ந்தது. கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் சிமெண்ட் விலையை அரசு முறைப்படுத்த வேண்டும் என்னும் கோரிக்கையோடு வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கினர்.

சிமெண்ட் விலை உயர்ந்தது எப்படி?

தமிழகத்தில் செயல்படும் கட்டுமானப் பணிகளுக்காக மாதம்தோறும் தேவைப்படும் சிமென்டின் அளவு தோராயமாக 17 லட்சம் மெட்ரிக் டன். இது போதாது என்று ஆந்திராவிலிருந்து சுமார் 4 மெட்ரிக் டன் சிமெண்ட் நமது தேவையைப் பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது. ஆந்திராவில் உற்பத்தியாகும் சிமெண்ட் மூட்டைக்கு ரூ.100 வரை விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை ஏற்றத்தால் சிமெண்ட் மூட்டை ரூ. 310 வரை விலை உயர்ந்தது. விலை ஏற்றம் காரணமாக ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்குக் கொண்டுவரப்படும் சிமெண்டின் அளவு 3 லட்சம் மெட்ரிக் டன்வரை குறைந்தது. இதனால் சிமெண்ட் கிடைப்பதில் சிறிது தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன்மூலம் தமிழகத்தில் இருக்கும் சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் விலையை ஏற்றியதாகக் கூறுகின்றனர் சிலர்.

‘அம்மா சிமெண்ட்’ உதயம்

தனியார் சிமெண்ட் தயாரிப்பு நிறுவனங்களின் இந்தத் திடீர் விலையேற்றத்தைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம், தமிழகத்தில் சலுகை விலையில் ‘அம்மா சிமெண்ட்’ விற்பனைக்கு வரும் என்று அறிவித்தார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. திட்டம் அறிவிக்கப்பட்டு 3 மாதங்கள் கழித்து தற்போது முதல்முறையாக திருச்சி மாவட்டத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. வீடு கட்டுவோர் பாதிப்புக்குள்ளாவதைத் தடுக்க உதவும் வகையில் ‘அம்மா சிமென்ட்’ தொடங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தொடங்கியுள்ள இந்தத் திட்டம் குறித்து கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் என்ன நினைக்கிறார்கள்? கட்டுமானத் தொழிலில் நீண்டகால அனுபவம் உள்ள ஒரு மேஸ்திரி இதுபற்றி கூறும்போது, “இது நிச்சயம் மனை வாங்கி தனியாக வீடு கட்டுபவர்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம்தான். அரசு நிர்ணயித்திருக்கும் மனை அளவுகளில் வீடு கட்டுவதற்கு மானிய விலையில் கிடைக்கும் சிமெண்ட் பெரிதும் உதவியாக இருக்கும். அதோடு மத்திய, மாநில அரசு சார்பாக நடக்கும் கட்டுமானப் பணிகளுக்கும் தேவையான சிமெண்ட் தாராளமாகக் கிடைக்கும். இதனால் அரசு சார்பான பொதுத்துறை கட்டுமானப் பணிகள் தடங்கலின்றி நடக்கும்” என்கிறார்.

10-1420878123-amma-cement-hits-market4-600

கட்டுமானத் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ளவரும் காரைக்குடி கட்டுமானப் பொறியாளர் சங்கத்தின் தலைவருமான பொறியாளர் ரத்தினசாமி, “அரசு அறிவித்திருக்கும் அம்மா சிமெண்ட் விற்பனை நிச்சயம் வரவேற்கத் தகுந்ததுதான். தற்போது விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் துறையாக இருப்பது கட்டுமானத்துறைதான். இந்தத் துறையைக் காப்பாற்ற அரசு ஒழுங்குமுறை ஆணையம் அமைத்து, அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் சிமெண்டைச் சேர்க்க வேண்டும். அப்போதுதான் சரிந்துவிட்ட கட்டுமானத் துறையை நிமிர்த்தமுடியும்” என்றார்.

கட்டுமானத் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ளவரும் காரைக்குடி கட்டுமானப் பொறியாளர் சங்கத்தின் தலைவருமான பொறியாளர் ரத்தினசாமி, “அரசு அறிவித்திருக்கும் அம்மா சிமெண்ட் விற்பனை நிச்சயம் வரவேற்கத் தகுந்ததுதான். தற்போது விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் துறையாக இருப்பது கட்டுமானத்துறைதான். இந்தத் துறையைக் காப்பாற்ற அரசு ஒழுங்குமுறை ஆணையம் அமைத்து, அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் சிமெண்டைச் சேர்க்க வேண்டும். அப்போதுதான் சரிந்துவிட்ட கட்டுமானத் துறையை நிமிர்த்தமுடியும்” என்றார்.

தனிப்பட்ட முறையில் மலிவு விலை சிமெண்ட் விற்பனைக்கு வரவேற்பு காணப்படுகிறது. ஆனால், தற்போது தனி வீடு கட்டப்படும் அளவுக்கு அடுக்குமாடி வீடுகளும் அதிகம் கட்டப்படுகின்றன. அரசு அறிவித்த வழிகாட்டுதல்படி கட்டுமான நிறுவனங்கள் மேற்கொள்ளும் பணிகளுக்கு அம்மா சிமெண்ட் கிடைக்க வாய்ப்பில்லை.

எனவே அதிக விலை கொடுத்து வெளிச் சந்தையில் சிமெண்டை வாங்க வேண்டும். எனவே மானிய விலையில் சிமெண்ட் விற்பனையை கட்டுமான நிறுவனங்களுக்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இதுபற்றி சென்னைப் புறநகர் கட்டுநர் சங்கத்தின் செயலாளர் கதிரவன் கூறும்போது, “தற்போது அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தனிப்பட்ட ஒருவர் மனையில் வீடு கட்டிக் கொள்வதற்கு இந்தத் திட்டம் உதவும். எங்களின் அமைப்பின் கீழே 200 பில்டர்கள் இருக்கின்றனர். 400 முதல் 500 இடங்களில் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன.

ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே 10 ஆயிரம் சதுரஅடிக்குக் கட்டிடம் கட்டும் நிலை இருக்கும். ஆகவே, அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவோருக்கும் அரசே ஒரு விலை நிர்ணயித்து மானிய விலையில் சிமெண்டைத் தருவதற்கு வழி ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் கடந்த பல மாதங்களாக ஸ்தம்பித்திருக்கும் கட்டுமானப் பணிகள் மீண்டும் முழுவேகத்தில் நடக்கும்” என்கிறார்.

திருச்சியில் மட்டுமே தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், தமிழகம் முழுவதும் பரவலாகும் போது, இத்திட்டத்தின் தாக்கமும் நோக்கமும் முழுமையாகத் தெரிய வரும் என்று நம்பலாம்!

Leave a Reply