அமித்ஷா டுவிட்டரை திடீரென முடக்கி வைத்த டுவிட்டர்: ஏன்?

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் டுவிட்டர் பக்கத்தில் உள்ள டிஸ்பிளே புகைப்படத்தை டுவிட்டர் நிர்வாகம் திடீரென முடக்கி வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டிவிட்டரில் புளு டிக்குடன் அக்கவுண்ட் வைத்துள்ளார் என்பது தெரிந்ததே

இந்த ட்விட்டர் கணக்கில் உள்ள டிஸ்ப்ளே புகைப்படத்தை திடீரென டுவிட்டர் சில நிமிடங்கள் முடக்கி வைத்தது

இந்த புகைப்படத்திற்கு யாரோ ஒருவர் உரிமை கோரியதாகவும் இதனால் முடக்கி வைத்ததாகவும் ஆனால் சில நிமிடங்களில் அமைச்சரின் டிஸ்ப்ளே புகைப்படம் தென்பட தொடங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் லடாக்கில் உள்ள பகுதியை ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியாக காண்பதற்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு உள்ள நிலையில் தான் அமித்ஷாவின் டுவிட்டர் பக்கம் முடக்கி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply