shadow

மீண்டும் பாஜகவின் தேசிய தலைவரானார் அமித்ஷா.
amit shah
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரும் பிரதமர் மோடியின் நெருக்கமான நண்பருமான அமித் ஷாவின் பதவிக்காலம் கடந்த 23ஆம் தேதி முடிவடைந்ததை அடுத்து நேற்று பாஜகவின் புதிய தலைவரை நியமனம் செய்யும் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

பாஜகவின் தலைவராக மீண்டும் அமித்ஷாவின் பெயரை பிரதமர் மோடி முன்மொழிந்தார். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அனந்த் குமார், ஜே.பி.நட்டா, வெங்கைய்யா நாயுடு, மத்தியப்பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, ஜார்கண்ட் மாநில முதல்வர் ரகுபர் தாஸ் ஆகியோர் வழிமொழிந்தனர். அவரை எதிர்த்து போட்டியிட வேறு யாரும் முன்வராததால் மீண்டும் தேசிய தலைவாக அமித்ஷா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

பாஜகவின். தேசிய தலைவராக மீண்டும் தேர்வாகியுள்ள அமித் ஷாவுக்கு வரவேற்பும் பாராட்டும் தெரிவிப்பதற்காக அக்கட்சியின் நாடாளுமன்றக்குழு கூட்டம் வருகின்ற 28-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இதை, பா.ஜ.க. தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply