shadow

அமித்ஷாவின் சென்னை வருகையில் அதிரடி இருக்குமா?

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வரும் 22ஆம் தேதி சென்னை வருகிறார். அவர் வருவதற்குள் அதிமுகவின் அணிகள் இணைகின்றதோ இல்லையோ, நிச்சயம் அதிமுகவில் உள்ள அதிருப்தி தொண்டர்கள் பாஜகவில் அவர் முன் இணையும் நிகழ்வு நடைபெறும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன

தமிழகத்தில் காலூன்ற பல அதிரடி திட்டங்களுடன் அமித்ஷா சென்னை வரவுள்ளதாகவும், அவரது வருகைக்கு பின்னர் தமிழக பாஜகவில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது

அதுமட்டுமின்றி அமித்ஷா சென்னை வரும்போது முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிலர் பாஜகவில் இணையவிருப்பதாகவும், ஒருசில சினிமா நட்சத்திரங்களும் பாஜகவில் ஐக்கியமாக முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுவதால் அமித்ஷாவின் சென்னை வருகையில் அதிரடி இருக்கும் என்றே கருதப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *