காங்கிரஸ் உடன் யார் கூட்டணி வைத்தாலும் தோற்பார்கள். திமுக தோல்வி குறித்து அமித் ஷா
amit shah
தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து அந்த கட்சிக்கு 41 தொகுதிகளை ஒதுக்கியிருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி சொற்ப தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்காமல் திமுக தனித்து போட்டியிருந்தாலே இன்னும் 10 முதல் 20 தொகுதிகள் அதிகம் பெற்று ஆட்சியை பிடித்திருக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்த கருத்தையே பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் கூறியுள்ளார்.

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா கூறியதாவது: இன்றைய சூழ்நிலையில் காங்கிரசுடன் யார் கூட்டணி அமைத்தாலும் தோற்று போவார்கள். அதை இப்போதைய தேர்தலும் நிரூபித்து உள்ளது. தமிழ்நாட்டிலும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததால் தி.மு.க. தோற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளே அவர்களை வீழ்ச்சி அடைய செய்கிறது. அங்கு வாரிசு அரசியல் நடக்கிறது. அந்த கட்சி அனைத்து மாநிலங்களில் இருந்தும் விடுவிக்க வேண்டும்.

கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம், அசாம் என அனைத்து இடங்களிலும் எங்களுடைய கட்சி பலம் அதிகரித்து உள்ளது. இது 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நல்ல பலனை தரும் என எதிர்பார்க்கிறோம். இங்கும் அதிக இடங்களை நாங்கள் பெறுவோம்.

இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *