அமீத்ஷா சென்னை வருகை திடீர் ஒத்திவைப்பு

பாஜக தேசிய தலைவர் அமீத்ஷா வரும் புதன்கிழமை சென்னை வர திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென அவரது தமிழக வருகைப்பயண திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இன்று பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடக்கவிருப்பதால் அதில் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொள்ளவிருப்பதாகவும் இதன் காரணமாக அவரது தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் பாஜக தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

அமித்ஷா வருகை காரணமாகவே இன்று ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் அவசர அவசரமாக இணையவுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *