shadow

‘டங்கல்’ புயலில் தவிடுபொடியான விஷால்-சசிகுமார் படங்கள்

கடந்த வாரம் அமீர்கானின் ‘டங்கல்’, விஷாலின் ‘கத்திச்சண்டை’, சசிகுமாரின் ‘பலே வெள்ளைத்தேவா’, விசுவின் ‘மணல் கயிறு 2’ ஆகிய படங்கள் வெளியாகின.

இந்தி டப்பிங் படமாக இருந்தாலும் அமீர்கானின் ‘டங்கல்’ பெரும்பாலான சென்னை திரையரங்குகளை ஆக்கிரமித்து கொண்டன. இந்த படம் சென்னையில் 15 திரையரங்க வளாகங்களில் திரையிடப்பட்டு 3 நாட்களில் ரூ.1 கோடிக்கும் மேல் ஓபனிங் வசூலை பெற்றது.

ஆனால் விஷாலின் ‘கத்திச்சண்டை’ சுமார் 90 லட்ச ரூபாயும், சசிகுமாரின் ‘பலே வெள்ளையத்தேவா’ சுமார் ரூ. 36 லட்சமும் ஓப்பனிங் வசூலாக பெற்றது. இரண்டு படங்களுக்கும் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததால் ஓப்பனிங் வசூல் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மணல்கயிறு 2′ படத்தின் வசூல் குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை.

Leave a Reply