shadow

விஸ்வநாதன் ஆனந்த் கேரக்டரில் அமீர்கான்?
anand
உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் குறித்த திரைப்படம் ஒன்று எடுக்கப்பட்டால் அவருடைய கேரக்டருக்கு பொருத்தமான நடிகர் யார்? என்ற கேள்விக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் என்ற பதில் கிடைத்துள்ளது. இந்த பதிலை அளித்தவரே விஸ்வநாதன் ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல இணையதளமான டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக்கு சமீபத்தில் பேட்டியளித்த விஸ்வநாதன் ஆனந்த், தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை யாராவது திரைப்படமாக எடுக்க முயற்சி செய்தால் கண்டிப்பாக தன்னுடைய ஒத்துழைப்பு கிடைக்கும் என்றும், என்னுடைய கேரக்டருக்கு மிகப்பொருத்தமாக அமீர்கான் மட்டுமே  இருப்பார் என தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் மகாராஷ்ட்ரா செஸ் லீக் போட்டியின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அமீர்கானுடன் செஸ் விளையாடிய அனுபவம் தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத நாட்களில் ஒன்று என கூறிய ஆனந்த், அமீர்கான் இந்தியாவில் உள்ள நடிகர்களில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என தெரிவித்தார்.

தமிழ் நடிகர்களில் தனக்கு மிஅக்வும் பிடித்தவர் கமல்ஹாசன் என்றும் அவர் நடித்த பாபநாசம்’ படத்தை சமீபத்தில் பார்த்து ஆச்சரியப்பட்டதாகவும் விஸ்வநாதன் ஆனந்த் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply