shadow

முஸ்லீம் என நினைத்து இந்தியரின் கடையை எரிக்க முயன்ற அமெரிக்கர் கைது

அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் முஸ்லீம்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அமெரிக்க மக்களுக்கும் முஸ்லீம்கள் மீதான வெறுப்பு நாளுக்கு நாள் வளர்ந்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

முஸ்லீம்கள் மற்றும் வெளிநாட்டினர்களை நாட்டை விட்டு துரத்துவதில் அவர்கள் குறியாக இருக்கின்றனர். சமீபத்தில் நடந்த இந்திய பொறியாளர் கொலையும் இதை சார்ந்ததுதான்

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள புளோரிடோ மாகாணத்தில் முஸ்லீம் என நினைத்து ஒரு இந்தியரின் கடையை தீயிட்டு கொளுத்த அமெரிக்கர் ஒருவர் முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரிச்சர்ட் லாயிட் என்ற 64 வயது முதியவர் அந்த கடையின் உரிமையாளர் ஒரு முஸ்லீம் என நினைத்து இந்த செயலில் ஈடுபட்டதாக முதல்கட்ட காவல்துறையினர்களின் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் அவரது மனநலம் குறித்து சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், ஆய்வின் முடிவில் அவர் வேண்டுமென்றே இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புளோரிடா மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது

Leave a Reply