shadow

Obama-Modi_jpg_1898072fகடந்த மாதம் பாரதப்பிரதமராக பதவியேற்ற நரேந்திரமோடியை அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும் கவுரவத்தை அளிக்க வேண்டும் என்று அந்நாட்டு எம்.பி.க்கள் அதிபர் ஒபாமாவிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். இதுகுறித்த செய்தி ஒன்றை அமெரிக்க செய்தித்தாளான தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று அமெரிக்க எம்.பிக்கள் கூட்டத்தில் பேசிய குடியரசு கட்சியை சேர்ந்த எட்ராஸ், ஜார்ஜ் ஹோல்டிங் ஆகிய எம்.பி.க்கள்,  சபாநாயர் ஜான் போனருக்கு வைத்த கோரிக்கையில், “வரும் செப்டம்பர் மாதம் இந்திய பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்கா வரும் போது, அவரை அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்ற கேட்டுக்கொள்ளும்படி கூறியுள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்காவுக்கு தெற்காசிய நாடுகளில் இந்தியாவை போன்ற நட்பு நாடு எதுவும் இல்லை என்றும், அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு என அனைத்து அம்சங்களிலும் இந்தியா அமெரிக்கா இடையே ஒத்த கருத்து உள்ளது என்றும் கூறியுள்ள அவர்கள், சபாநாயகர் உடனடியாக இதுபற்றி முடிவெடுக்க அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் கருத்து கேட்கவேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

கடந்த 2013ஆம் ஆண்டு வரை நரேந்திர மோடிக்கு விசா வழங்க முடியாது என்று கூறிவந்த அமெரிக்கா, தற்போது தனது நிலையை மாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்க செல்லும் மோடி, அமெரிக்க பாராளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply