அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில்,கடன் உச்சவரம்பை உயர்த்தும் மசோதாவிற்கு பிரதிநிதிகள் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.இதன் மூலம்,அமெரிக்காவுக்கு ஏற்படவிருந்த பொருளாதார நெருக்கடி தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

ஆளும் கட்சியான ஜனநாயக கட்சிக்கும், எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சிக்கும் இடையே நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் நேற்றிரவு உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த தகவலை இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் வெள்ளை மாளிகையில் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

இதனால், இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

கடந்த 16 நாட்களாக நீடித்த இந்த நிதி நெருக்கடியால், சம்பளம் இல்லா விடுப்பில் சென்றுள்ள எட்டு லட்சம் அரசு ஊழியர்கள், வரும் ஓரிரு நாட்களில் பணிக்குத் திரும்ப அழைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply