அமெரிக்காவில் இனி இந்தியர்கள் குடியேற முடியாதா? அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவில் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவர் குடியேற முடியாத வகையில் செய்யும் ஒரு ஆணையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட உள்ளதாக வெளிந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் பொருளாதாரம் சீரழிந்து வரும் நிலையில் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பின் பாதுகாப்பை உறுதி செய்ய தற்காலிகமாக அமெரிக்காவில் வெளிநாட்டவர் குடியேறுவதற்கு தடை விதிக்க அமெரிக்கா அதிபர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது

இது குறித்து ஆணையில் டிரம்ப் விரைவில் கையெழுத்திட இருப்பதாக கூறப்படுவதால் இந்தியர்கள் உள்பட எந்த வெளிநாட்டினரும் இன்னும் சில ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் குடியேற முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது

Leave a Reply