shadow

Ambika_16514_mதமிழில் எதிர்நீச்சல், தலைவா, தில்லுமுல்லு, பாண்டிய நாடு, நான் சிகபு மனிதன் போன்ற திரைப்படங்களை வெளியிட்ட வேந்தர் மூவிஸ் நிறுவனம், முதல்முறையாக மலையாள திரையுலகில் காலடி எடுத்து வைக்கின்றது.

மலையாளத்தில் முதன்முதலாக வேந்தர் மூவீஸ் மெதுல்லா ஓப்லம் கட்டா என்ற திரைப்படத்தை தயாரிக்கின்றது. இந்த படத்தை சுரேஷ் நாயர் என்பவர் இயக்குகிறார்.

1980களில் தமிழ், மலையாளம் தெலுங்கு போன்ற மொழி படங்களில் பிசியாக இருந்த நடிகை அம்பிகா, இந்த படத்தின் அனைத்து  பாடல்களையும் எழுதுகிறார்.

மலையாள திரைப்படமான இந்த படத்தில் தமிழ்ப்பாடலும் ஒன்று இடம்பெறுகிறது என்பது குறிபிடத்தக்கது.

ராகுல் மாதவ், சாஜு, அர்ஜூன் நந்தகுமர் மற்றும் ஆவனா நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Leave a Reply