shadow

mca

புது தில்லியிலுள்ள அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் 2 வருட முழுநேர எம்பிஏ மற்றும் எம்.ஏ சோஷியல் எண்டர்பிரினியர்ஷிப் படிப்பில் 2015-17ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

தகுதி:

50 சதவீத மதிப்பெண்களுடன் 3 வருடப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் சிறப்பு பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப்பிரிவினர் ரூ.1000. சிறப்பு பிரிவினர் ரூ.500 இதனை டிடியாக எடுத்து ஆன்லைன் மூலமாக கட்டணத்தை செலுத்த வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அதில் தகுதியானவர்கள் மட்டுமே குழுவிவாதம் மற்றும் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.

நுழைவுத்தேர்வு பிப்.,15ம் தேதி நடத்தப்படுகிறது.

மேலும் விரிவான தகவல்களுக்கு www.aud.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். விண்ணப்பிக்க டிச.,31 கடைசி நாளாகும்.

Leave a Reply