shadow

aambalaபூஜை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து விஷால், நடிக்கும் அடுத்த படம் ‘ஆம்பள. இயக்குனர் சுந்தர் சி இயக்கும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்து வருகிறார். மேலும் மதுரிமா, மாதவி லதா, ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா, வைபவ் ரெட்டி, சந்தானம் ,சதிஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஷால் தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரிக்கும் இந்த திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் ஆம்பள படத்தில் ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ள ஒரு பாடலை மட்டும் இன்று ரிலீஸ் செய்துள்ளார் படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான விஷால். இந்த பாடல் தற்போது யுடியூபிலும், சமூக வலைத்தளங்களிலும் பெருவாரியான விஷால் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1BWSZp8″ standard=”//www.youtube.com/v/pPxBqdIgVYM?fs=1″ vars=”ytid=pPxBqdIgVYM&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep8844″ /]

Leave a Reply