Chennai Today News

அமேசான் நிறுவனத்தின் அடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா?

அமேசான் நிறுவனத்தின் அடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா?

உலக அளவில் மிகப்பெரிய ஆன்லைன் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் புதிய முயற்சியாக மருத்துவதுறையில் கால்வைக்க முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த அமேசான் என்பது உலக அளவில் செயல்பட்டு வரும் ஒரு மிகப்பெரிய ஆன்லைன் அங்காடி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் மூலம் மில்லியன் கணக்கான மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்நிறுவனம் தற்போது மருத்துவ துறையில் கால்பதிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி ‘பில்பேக்’ எனப்படும் ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனத்துடன் அமேசான் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது இதையடுத்து, அமேசான் நிறுவனம் இனி மருந்துகளையும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் என்றும் இந்த புதிய முயற்சிக்கு உலகெங்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!