shadow

அமேசானின் அபார வளர்ச்சி: உலக சாதனையை நெருங்குகிறது

அமேசான் நிறுவனத்தின் அபார வளர்ச்சி மற்றும் பங்குச்சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் உயர்வு ஆகியவை காரணமாக மிகவிரைவில் இந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் 1 டிரில்லியன் டாலரினை பெற்று உலக சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது.

முதலீட்டாளர்கள் சில மாதங்களாக ஆல்பாபெட், ஆப்பிள் மற்றும் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களில் எது முதல் 1 டிரில்லியன் டாலர் (ரூ.66 லட்சம் கோடி) சந்தை மூலதனம் படைத்த நிறுவனமாக உருவெடுக்கும் என்று விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் அதனை வெற்றிகரமாக அமேசான் செய்து காட்டும் என்று பங்கு சந்தை எக்ஸ்சேஞ்சுகள் தெரிவித்துள்ளன.

முதல் காலாண்டு அறிக்கையில் அமேசான் நிறுவனத்தின் லாபம் இரட்டிப்பாகியுள்ளதாக அறிவித்த நிலையில் வெள்ளிக்கிழமை அமேசானின் பங்குகள் 8 சதவீதம் வரை உயர்ந்து. அமேசானின் ரீடெய்ல் வணிகம் பெரிய அளவில் வளர்ச்சியினை அளிக்கவில்லை என்றாலும் அதன் பிற வணிகங்கள் உதவியுடன் அமேசான் டிரில்லியன் டாலர் நிறுவனமாக உருவெடுக்க வாய்ப்புகள் உள்ளது.

இந்நிலையில், அமேசானின் பங்குச்சந்தை மூலதனமானது 762 பில்லியன் டாலராக (ரூ 50.7 லட்சம் கோடி) தற்போது உள்ளது.

Leave a Reply