shadow

அமர்நாத் யாத்திரை முதல் நாளிலேயே திடீர் நிறுத்தம்: பக்தர்கள் சோகம்

ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் அமர்நாத் பனிலிங்க யாத்திரை நேற்று முதல் ஆரம்பமான நிலையில் முதல் நாளிலேயே கனமழை காரணமாக நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் சோகமாயினர்

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள. அமர்நாத் குகையில் உருவாகும் பனி லிங்கத்தை, பக்தர்கள் தரிசனம் செய்ய இந்த ஆண்டு ன்1.96 லட்சம் பக்தர்கள் பதிவு செய்தனர். கடந்த ஆண்டு, அமர்நாத் யாத்திரை பக்தர்கள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில், எட்டு பேர் உயிரிழந்ததால் இந்த ஆண்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று யாத்திரை தொடங்கியது.

இந்த நிலையில் திடீரென பெய்த கனமழை காரணமாக பக்தர்கள் யாத்திரை செல்ல தடை விதிக்கப்பட்டது. பக்தர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும்,. 48 மணி நேரத்துக்கு, பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், யாத்திரை மீண்டும் இரண்டு நாட்கள் கழித்தே தொடங்கும் என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply