shadow

vijay amalapaul marriage சென்னையில் இயக்குநர் விஜய் -நடிகை அமலா பால் திருமணம் இந்து முறைப்படி இன்று இனிதே நடந்தது.
 
மைனா, ‘தெய்வத் திருமகள்’, தலைவா போன்ற  படங்களில் நடித்த அமலாபாலுக்கும் இயக்குநர் விஜய்க்கும், இடையே மலர்ந்த காதல் இன்று திருமணத்தில் முடிந்துள்ளது. காதலர்கள் இருவரும் தங்கள் காதலை கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் பகிரங்கமாக பத்திரிகையாளர்கள் முன் ஒப்புக்கொண்டனர்.

இதை அடுத்து, கடந்த 7ஆம் தேதி விஜய் – அமலா பால் திருமண நிச்சயதார்த்தம் கேரளாவில் உள்ள கொச்சியில், ஒரு தேவாலயத்தில் நடந்தது. அமலா பால் கிறிஸ்தவர் என்பதால், கிறிஸ்துவ முறைப்படி மோதிரம் மாற்றிய நிச்சயதார்த்த நிகழ்ச்சி சிறப்பாகநடந்தது.

vijay amalapaulஇயக்குனர் விஜய் இந்து என்பதால், இன்று காலை  இந்து முறைப்படி இருவருக்கும் சென்னையில் திருமண நிகழ்ச்சி நடந்தது. சென்னை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில், திரையுலக நட்சத்திரங்கள், மற்றும் உறவினர்கள், நண்பர்கள் முன் இருவருக்கும் திருமணம் நடந்தது. மணமகள் அமலா பாலுக்கு இயக்குனர் விஜய் காலை பத்து மணிக்கு தாலி கட்டினார்.

இயக்குநர்கள் மணிரத்னம், பாலா, ப்ரியதர்ஷன், நடிகர் விக்ரம், ஆர்யா, இயக்குநர் ஆர். சுந்தரராஜன், விஜய் மனைவி சங்கீதா, இயக்குநர் பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன் உள்பட திரையுலகப் பிரமுகர்கள் பலரும் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர்.

shadow

Leave a Reply