amala paulஇயக்குனர் விஜய்க்கும் நடிகை அமலாபாலுக்கு கடந்த 12ஆம் தேதி சென்னையில் வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் புதுமண தம்பதிகள் மாலத்தீவுக்கு தேனிலவிற்காக சென்றுள்ளனர்.

இந்நிலையில் அமலாபால் தன்னுடைய டுவிட்டரில் தேனிலவு சென்ற இடத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பதிவு செய்தார். ஆனால் அந்த படங்கள் மிகவும் கிளாமராக இருந்ததால் அதை உடனடியாக அகற்றும்படிபடி விஜய் உத்தரவு போட்டதாகவும், அதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் டுவிட்டரில் அமலாபாலை பாலோ செய்தவர்கள் அமலாபால் வெளியிட்ட புகைப்படம் குறித்து மிக மோசமான கமெண்ட்டுக்கள் போட்டதால் அமலாபால் அதிர்ச்சி அடைந்துள்ளார். கொச்சையான கேள்விகள் கேட்டு அமலாபாலை சங்கடப்படுத்தியதால், அதிர்ச்சி அடைந்த அமலாபால் உடனடியாக தான் பதிவு செய்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கிவிட்டார். இதை எதிர்பார்த்துதான் விஜய் அமலாபால் மீது கோபப்பட்டதாக கூறப்படுகிறது.

மகிழ்ச்சியாக ஆரம்பித்த அமலாபாலின் தேனிலவு சோகத்தில் முடிந்துள்ளதால் அவர் கடும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *