shadow

பாஸ்கர் ஒரு ராஸ்கல் குறித்து வருத்தம் தெரிவித்த அமலாபால்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் குறித்து வருத்தம் தெரிவித்த அமலாபால்

அரவிந்தசாமி, அமலாபால் நடித்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படம் கடந்த 11ஆம் தேதியே ரிலீஸ் ஆகவிருந்த நிலையில் திடீரென தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கு ஏற்கனவே நடிகர் அரவிந்தசாமி வருத்தம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது நடிகை அமலாபாலும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமலா பால் தனது பேஸ்புக் பக்கத்தில்,‘பட ரிலீஸ் எதுக்காக தள்ளி வைத்தனர் என தெரியவில்லை. படம் விரைவில் ரிலீஸாகும் என’ பதிவிட்டுள்ளார். இந்த படத்தின் வெற்றி தன்னுடைய மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்று அமலாபால் நினைத்திருந்த நிலையில் திடீரென ரிலீஸ் தேதி தள்ளி வைப்பட்டுள்ளது அவரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இந்த படம் ஏற்கனவே பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது என்பது என்பதும் இந்த படத்திற்கு பைனான்ஸ் பிரச்சனை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply