shadow

அஜித்-அனிருத்தின் ‘ஆலுமா டோலும’க்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய ‘வேதாளம்’ படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் ஏற்படுத்திய சாதனை எண்ணிலடங்காதவை. உலகம் முழுவதும் இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆகியது. இந்த பாடலின் வரிகள், மொழி புரியாதவர்கள் கூட இந்த பாடலின் இசைக்காக ரசித்தனர். அனிருத்தின் ‘கொலைவெறி’ பாடலுக்கு பின்னர் அவருக்கு மீண்டும் ஒரு அடையாளத்தை இந்த பாடல் தேடி தந்தது.

இந்நிலையில் இந்த பாடல் தற்போது மேலும் ஒரு சாதனையை செய்துள்ளது. இந்த பாடலுக்கு யூடியூபில் 1.5 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும் 56000க்கும் மேற்பட்ட லைக்குகளை இந்த பாடல் பெற்று சாதனை செய்துள்ளது. அஜித்தின் திரையுலக வாழ்வில் இதற்கு முன் இவ்வளவு பாரவையாளர்களை கொண்ட பாடல் வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டுவிட்டரை எப்போதும் தன் வசத்தில் வைத்திருக்கும் அஜித் ரசிகர்கள் இந்த சாதனையை டுவிட்டரில் தனி ஹேஷ்டாக் உருவாக்கி அதை டிரெண்ட் ஏற்படுத்தி கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply