shadow

bcbed619-8bd4-4211-a15a-a69c5062741a_S_secvpf

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 2,
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்,
சாட் மசாலா – ஒரு டீஸ்பூன்,
வேர்கடலை பொடி – கால் கப்,
எண்ணெய் – கால் கப்,
கொத்தமல்லி தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• உருளைக்கிழங்கை தண்ணீர் விடாமல், குக்கரில் வேக வைத்து வெந்ததும் தோல் உரித்து நன்றாக மசித்து கொள்ளவும்.

• பின்னர் அதனுடன் சீரகத்தூள், சாட் மசாலா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

• அதிலிருந்து கொஞ்சம் எடுத்து விரும்பிய வடிவில் தட்டி, வேர்க்கடலை பொடியில் புரட்ட வைக்கவும்.

• தவாவில் எண்ணெய் விட்டு ஒவ்வொன்றாக வைத்து சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றவும். பிறகு, வெந்ததும் திருப்பிப் போட்டு, பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.

• இதற்கு தக்காளி சாஸ், புதினா சட்னி நல்ல காம்பினேஷன்.

Leave a Reply