shadow

images (1)

தேவையான பொருட்கள் :

பன்னீர் – 1 கப்
உருளைக்கிழங்கு – 2
பாலக்கீரை – 1 கட்டு
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
வெங்காயம் – 2
தக்காளி – 2
பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை – தலா 2,
கரம் மசலாத்தூள் – அரை டீஸ்பூன்,
வெண்ணெய் – 50 கிராம்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• உருளைக்கிழங்கை வேக வைத்து சதுரமான துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

• பன்னீரை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

• பாலக்கீரையை நன்றாக கழுவி 2 நிமிடம் வேகவைத்து அரைத்து கொள்ளவும்.

• வெங்காயம், தக்காளியை தனித்தனியாக வேக வைத்து தனித்தனியாக அரைத்து கொள்ளவும்.

• ஒரு கடாயில் வெண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை ஆகியவற்றை தாளித்து அதனுடன் அரைத்த வெங்காய விழுது, தக்காளி விழுது, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்துக் கிளறவும்.

• பச்சை வாசனை போனவுடன் கரம் மசாலாதூள், அரைத்த பாலக் கீரை விழுது, உப்பு, பன்னீரையும் சேர்த்து கிளறவும்.

• கடைசியாக வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்துக் கிளறி 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும்.

• இதை சூடான சப்பாத்தியுடன் சாப்பிட்டால்… சுவை அமர்க்களம்தான்!

Leave a Reply