shadow

lakhviகடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் தாஜ் ஓட்டலில் படுபயங்கர தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் மூளையாக செயல்பட்டு சதித்திட்டம் தீட்டிய முக்கிய குற்றவாளி லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஜகியுர் ரஹ்மான் லக்வி நேற்று விடுதலை செய்யப்பட்டது கடும் அதிர்ச்சியளிப்பதாக பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார். லக்வியின் விடுதலை உலக மனித இனத்திற்கே அச்ச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மும்பை தாக்குதல் தீவிரவாதி 55 வயதான ரஹ்மான் லக்வி  கடந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கைது செய்யப்பட்டு, அவர் மீது இஸ்லாமாபாத் தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடைந்தும், இந்த வழக்கின் விசாரணை நடத்தப்படவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கில் பாகிஸ்தான் அரசு போதுமான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்பதால் லக்வியை விடுதலை செய்ய வேண்டும் என்று அவருடைய வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நேற்று முன்தினம் லக்வியை விடுவிக்கும்படி இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ராவல்பிண்டியில் உள்ள சிறையில் இருந்து நேற்று உடனடியாக லக்வி விடுவிக்கப்பட்டார்.

லக்வியின் விடுதலைக்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து கருத்து கூறிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ”லக்வியை பாகிஸ்தான் விடுவித்துள்ளது துரதிர்ஷடவசமானது என்றும் இந்த விஷயத்தை மத்திய அரசு உரிய முறையில் கையாண்டு வருவதால், ஐ.நா.வின் தலையீடு தேவை என கூச்சலிட வேண்டிய கட்டாயத்திற்கு பாகிஸ்தான் ஆளாகியிருக்கிறது” என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply