shadow

Girl-smokingரஷ்யாவில் சமீபகாலமாக பிறக்கும் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியின்றியும், ஊனமாகவும் அதிகமாக பிறக்கின்றது. இதற்கு பெண்கள் சிகரெட் பிடிப்பதே காரணம் என ரஷ்யாவின் மருத்துவ ஆய்விதழ் ஒன்று சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

இதனால் ரஷ்ய அதிபர் புதின் விரைவில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் 40 வயதுக்கு குறைந்த பெண்கள் இனி சிகரெட் பிடிக்கக்கூடாது என்றும் மீறி புகைத்தால் 50 டாலர் அபராதமும் சிறைத்தண்டனையும் உண்டு என்ற சட்டம் விரைவில் ரஷ்ய அரசு கொண்டு வரவுள்ளது. 40 வயதுக்கு மேல் சிகரெட் புகைக்கும் பெண்கள் தங்கள் வயதை நிரூபிக்கும் சான்றிதழை காட்ட வேண்டும் என்றும் அந்த சட்டம் கூறுகிறது

மேலும் 40 வயதுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை விற்பவர்களுக்கு 5000 டாலர்கள் வரை அபராதமும் விதிக்கவும் இந்த சட்டத்தில் இடமுள்ளதாக கூறப்படுகிறது.

பெண்களின் கருப்பை சிதைவுக்கு முக்கிய காரணமாக பெண்கள் புகைக்கும் நிகோடின் இருப்பதால் ரஷ்ய அரசு இந்த அதிரடி சட்டத்தை விரைவில் இயற்றவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சட்டத்திற்கு இளம்பெண்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சட்டம் ஆண்களுக்கு பொருந்தாது என்பதால் ரஷ்ய இளம்பெண்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் செம கடுப்புடன் ஸ்டேட்டஸ் போட்டு வருகின்றனர்.

Leave a Reply